நன்றி ! மீண்டும் பார்க்க!....

Copywrite @2016 ENVIS Centre !  All rights reserved  This site optimized for 1250 x 2000 Screen resolution        தனியுரிமை | நிபந்தனைகள்
முகவுரை
      இந்தியா, ஆசிய நாடுகளில் ஒரு வலுவான பொருளாதார வல்லரசாக உருவாகி வருகிறது.  
தொழில்மயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம்  
அளிக்கின்றது.
     இந்திய அரசின்சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்’, சுற்றுச்சூழல்  
மேலாண்மை கொள்கைகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு  
மற்றும் உயிரினங்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. சரியான  
சுற்றுச்சூழல் தகவல் தேவையை உணர்ந்து, நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்கள், கொள்கை வகுப்பாளர்கள்,  
ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொது மக்களுக்கும் பயன்படும்  
தேசிய மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் தகவல்களை வழங்கும் நோக்குடன் இந்த அமைச்சகம், 1982-ஆம்  
ஆண்டு சுற்றுச்சூழல் தகவல் (ENVIS) மையங்களை நிறுவியுள்ளதுநாடு முழுவதும் 68 ENVIS மையங்கள்  
பல்வேறு கருப்பொருட்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள், தேசிய  
மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் தகவல்களை சேகரித்தல், தொகுத்தல், சேமித்தல், மற்றும் அத்தகவல்களை  
பயனாளிகளிடேயே பரப்புதல் ஆகிய பொதுவான நோக்கங்களைக் கொண்டுள்ளன.
     சென்னைப் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையில், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை  
மாற்றம் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ENVIS மையம் 'நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல்  
மேலாண்மை' என்ற தலைப்பில் தகவல் பரப்புதல் சேவையில் ஈடுபட்டுவருகிறது.